Ragu Kethu Peyarchi Palan

Ragu Kethu Peyarchi Palan

    THULAM Ragu Kethu Peyarchi Palan

துலாம் ராசி நேயர்களே : கடந்த ஒன்றை ஆண்டுகளாக உங்கள் ராசிக்கு 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் ராகு பகவான், உங்கள் ஜென்ம ராசிக்குள் கேது பகவான் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் நீங்களே எதிர்பார்க்காத அளவிற்கு சங்கடங்களையும், சோதனைகளையும், நிம்மதியற்ற நிலைமையும், வழங்கி வந்தார்கள். இந்த நிலையில் தான் 08.10.2023 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கும், கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாகி 26.04.2025 வரை அங்கிருந்து உங்களுக்கு ஒன்றை ஆண்டுகளுக்கு பலன்களை வழங்கிட இருக்கிறார்கள். மனதளவில் சிரமத்தைத் தந்து வந்த கேது 12ம் இடத்தில் அமர்வதால் வீண் குழப்பங்கள் நீங்கி நல்லறிவினைப் பெற முடியும். நீங்கள் விரும்பிய செயல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
திடீர் செலவுகள் உங்களின் நிதி ரீதியான நெருக்கடிகள் ஏற்படுத்தலாம். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் உங்களிடம் இயற்கையாகவே இருக்கும். அடுத்த ஒன்றரை ஆண்டு காலம் செய்ய உள்ள சேவை உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்துவதோடு உங்கள் தனிப்பட்ட செல்வாக்கையும் உயர்த்தும். நிகழவுள்ள ராகு கேது பெயர்ச்சி உங்கள் மனநிலையில் பெருத்த மாற்றத்தை உண்டாக்கும்.
குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்பு ஏற்படலாம். திருமணத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பொருளாதார நிலை வெளியில் சொல்லும்படி இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் தங்களுக்குள் பரஸ்பரம் அனுசரித்து போகவும். புது நபர்களிடம் எப்போதும் அளவாக பேசவும். உறவினர்களிடம் மனஸ்தாபம் வராமல் இருக்க அவர்களை அனுசரித்து செல்லவும். பணம் தொடர்பாக யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம்.
மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். இது வரை உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை தானாக வந்து அடிபணிந்து போவார்கள். மனதில் இருந்து வரும் விரக்தி காணாமல் போகும். எந்த ஒரு காரியத்தையும் புத்துணர்ச்சியோடு செயல்பட்டு அதில் உடனடி வெற்றியைக் காணத் துவங்குவீர்கள். கடன் பிரச்னைகள் குறையத் துவங்கும். இதுநாள் வரை 7ம் இடத்தில் இருந்து வந்த ராகு 6ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பது மிகுந்த நற்பலனைத் தரும்.7ல் இருந்து ராகு விலகுவதால் இதுநாள்வரை இருந்து வந்த திருமணத்தடை அகலும். 6ல் ராகு அமர்வதால் எதிரிகளை வெற்றிகொள்வது, கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல் போன்ற நற்பலன்கள் கிட்டும்.
6-ம் இடத்திற்கு வந்து அமர உள்ள ராகுபகவான் உடல்நிலையில் சற்று சிரமத்தைத் தோற்றுவிப்பார். வயிறு சார்ந்த உபாதைகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே உடல் நிலை சரியான நிலையில் இருக்கும். குடும்ப மருத்துவரிடம் அணுகி உங்கள் உடலுக்கு தேவையான ஆலோசனையை பெற்றுக்கொண்டு உடல் உபாதைகளை சரிசெய்து கொள்ளவும்.
உத்யோகத்தில் மதிப்பு உயரும். உத்யோக பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உத்யோகத்தில் இடமாற்றங்கள் உண்டு. இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்பும், அதில் சாதக பலனை எதிர்பார்க்கலாம்.
தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டினை தவிர்க்கவும்.
ராகு கேது பெயர்ச்சியினால் பெற்றோர் உடல் நிலையில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளவும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். ராகுவின் அருளால் தொழில் ரீதியாக சிறப்பான தனலாபத்தைக் பெற முடியும். பொதுப் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மொத்தத்தில் இந்த ராகு-பெயர்ச்சி உங்களை ஏற்றம் பெற வைக்கும். திடீர் யோகங்களையும் வெற்றிகளையும் பெற்று தருவதாக அமையும்.

( For Thulam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Thulam (Libra) [Stars: Chitirai 3,4 Swathi 1,2,3,4 Visakam 1,2,3 quarters]

Expectations are very high and almost same amount of blockages on either way. Life goes with good and bad combinations. Kind to close ones, able to face difficulties, playing around the deck, talkative meaningfully, showing love and care to family and friends are some of the good qualities. Convinced only, if logically correct as per the belief. Medicine, hardware, technology, jewellery, vehicle, travels, cargo, beauty and cosmetics, fancy related business gives more profit. Need to get hold on belief and confidence to overcome difficulties. Heartily kind and quiet natured people who seek friends and elders advise for everything. If not reaching high targets, they maintain balance somehow with the help of will power. Famous personalities and people help them a lot to come up in life and they maintain range of status from bottom to top. Excellent care taking ability of thula rasi helps many people around the world with dedication.

'Friend in need is a friend indeed' proverb fits well for thula rasi as helps others by knowing their requirements. Carry work/ job pressure many times; but hard work and proving ability will bring them up in life. With good health people may live up to 80 to 85 years. Travel brings reasonable expectations; but they try to stay in their own place. Many a time excellent team coordination and team driven abilities are able to do any job completed beyond than the expected levels. Some thula rasi people perform well in the musical/ dance & singing areas if Venus placed well in horoscope. Better not to disclose personal matters to others if not required. Recommendations will help in many occasions to push others on the need basis who tend to help on return. Graceful, polite and admire beauty in all forms. Lucky colours are white, saffron and blue, stones are blue sapphire, cat's eye, and numbers are 1, 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.